‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 4 ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் எனவும், அது இந்த படத்தின் அடுத்த சிங்கிள் குறித்த அப்டேட் எனவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.