Categories
மாநில செய்திகள்

சென்னை கிண்டியில் புதிய பல் நோக்கு மருத்துவமனையின் திறப்பு விழா எப்போது….? அமைச்சர் மா.சு தகவல்….!!!!

சென்னை கிண்டியில் ரூபாய் 230 கோடி மதிப்பீட்டில், 5.50 லட்சம் சதுர அடியில், 7 தளங்கள் மற்றும் 1000 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் புதிய பல்நோக்கு மருத்துவமனை கட்டும் பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது‌. இந்த பணிகளை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கிண்டியில் கட்டப்பட்டு வரும் புதிய பல்நோக்கு மருத்துவமனை அடுத்த வருடம் ஜூன் மாதம் திறக்கப்படும். அதன் பிறகு இந்த மருத்துவமனைக்காக கிண்டி பிரதான சாலையில் இருந்து 3 நுழைவு வாயில்கள் அமைக்கப்படும்.

இந்த மருத்துவமனையானது அதி நவீன் வசதிகளுடன் கூடிய ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் உதவக்கூடிய மருத்துவமனையாக இருக்கும். இந்த மருத்துவமனை வளாகத்தில் முதியோருக்காக தனியாக மருத்துவமனை கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு ரூபாய் 87 கோடி நிதி ஒதுக்கிய நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு மருத்துவமனை கட்டும் பணிகள் முடிவடைந்த நிலையில் அது கொரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டது. எனவே தற்போது 4  கோடி மதிப்பீட்டில் கூடுதல் வசதிகளுடன் வயது மூத்தோருக்கான தனி மருத்துவமனை கட்டப்படும் என்று கூறினார். மேலும் புதிய பல்நோக்கு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என்றும் கூறினார்.

Categories

Tech |