Categories
அரசியல்

திரையரங்கு திறப்பு எப்போது ? அமைச்சருடன் ஆலோசனை …!!

தமிழகத்தில் திரையரங்கம் திறப்பது குறித்த ஆலோசனை நடைபெற்று வருகின்றது.

நாடு முழுவதும் திரையரங்குகள் இப்போது செயல்படாமல் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசும், மத்திய அரசும் திரையரங்க தளர்வுகள் குறித்து எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை. இந்தநிலையில் தடையிலிருந்து திரையரங்குகளை இயக்குவது குறித்து தற்போது அமைச்சர் கடம்பூர் ராஜூடம் திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர். இந்த கூட்டத்தில் பன்னீர்செல்வமும், உதயகுமார், ஆர்கே செல்வமணி ஆகியோர்  பங்கேற்றுள்ளனர். இதில் திரையரங்குகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள் அரசு எடுக்க வேண்டும்.

தனி நபர் இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், ஒரு இருக்கைக்கு அருகே பக்கத்து இருக்கை காலியாக விட்டு  அடுத்த இருக்கையில் அமர்ந்து கொள்ளலாம். ஒரு இருக்கைக்கு நடுவே மற்றொரு இருக்கை காலியாக இருக்கும் என்று திரையரங்க உரிமையாளர் சார்பில் தெரிவிக்கப்பட இருக்கின்றது.மேலும் திரையரங்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் இந்த ஆலோசனையில் பேசப்படுகின்றது. இதற்கான அறிவிப்புகள் விரைவில் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. 

Categories

Tech |