Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஆட்சியில் இல்லாத போதே அராஜகம்”… தி.மு.க. மீது முதல்வர் குற்றச்சாட்டு..!!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில், தமிழக முதல்வர் பழனிசாமி, 6ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

என்னுடைய தொழில் விவசாயம். அதைத்தான் நான் சொல்லி வருகிறேன். ஆனால், அதனை ஸ்டாலின் மாற்றிச் சொல்கிறார். ஸ்டாலின் வேண்டுமென்றே அரசை குறை கூறி வருகிறார். விவசாயிகள், விவசாய தொழிலாளிகள் ஆகியோர் பஞ்சத்தைப் போக்க கூடியவர்கள். விவசாய தொழில் பிரதான தொழில். அது வளர வேண்டும் என்பதற்காக தான் குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம்.

வறட்சியாலும், மழையாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அதற்கான கடனை தான் நாங்கள் தள்ளுபடி செய்கிறோம். அதில் என்ன தவறு. முதல்வரை விஷக்கிருமி என்று ஸ்டாலின் கூறுகிறார். நாட்டு மக்களைப் பற்றி நினைக்காத கட்சி தான் தி.மு.க., அ.தி.மு.க., அரசு எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் ஆகியோர், மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்று, அதற்கு தீர்வு கண்டு வருகிறார்கள். 9,70,000 மனுக்கள் அ.தி.மு.க., சார்பில் வாங்கப்பட்டது. அதில் 5 லட்சம் மனுக்களுக்கு தீர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

2020 செப்டம்பர் மாதமே உதவி மையம் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் காலத்தில் எங்கள் அரசு மக்களைக் காத்தது. கடந்த தைப்பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய், கொரோனா காலத்தில் ஆயிரம் வழங்கிய அரசு எங்கள் அரசு. இந்தாண்டு தை பொங்கலை சிறப்பாக கொண்டாடுவதற்காக, 2500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கியது. மக்களுக்கு தேவையான அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

கிராமத்தில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், விவசாயத் தொழிலாளிகளுக்கு கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்படும். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி அ.தி.மு.க., ஏரிகள் பொதுமக்கள் பங்களிப்புடன் தூர்வாரப்படுகிறது.
மக்களின் வாழ்க்கை தரம் உயர அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. இன்றியமையாதது நீர். நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்படுகிறது. அதற்காக தமிழக அரசு விருது பெற்றுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பெரியதாழையில், 55 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், கருங்குளம் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அம்மா மினி கிளினிக் ஸ்ரீவைகுண்டம் பகுதில் 6 திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வீணாவதை தடுக்க, தாமிரபணி ஆற்றில் ஆழ்வார்திருநகரி பகுதில் தடுப்பணை அமைக்கும் பணியை துவக்கப்பட்டுள்ளது.

தற்போது மின் மிகை மாநிலமாக தமிழகம் உயர்ந்துள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போதே, தி.மு.க., அராஜகத்தில் ஈடுபடுகிறது. ஆட்சிக்கு வந்தால், நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. இவ்வாறு, முதல்வர் கூறினார்.

Categories

Tech |