மக்கள் பிரசனையை அரசிடம் முறையிடுவார்கள் அனால் அரசு கடவுளிடம் முறையிடுகின்றது என்று அதிமுக யாகம் குறித்து துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சனை அரசுக்கு பெருத்த நெருக்கடியாக உருவாகியுள்ளது. இதனை சரி செய்ய நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று அதற்கான திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மழை வேண்டி யாகம் நடத்த வேண்டுமென்று அதிமுக தலைமை அறிவித்ததையடுத்து இன்று பல்வேறு மாவட்டங்களில் அதிமுக சார்பில் யாக பூஜை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் உள்ள தண்ணீர் பிரச்சனையை இந்த அரசு மெத்தனமாக கையாளுகின்றது என்று திமுக_வும் மாவட்டம் முழுவதும் போராட்டத்தை இன்று முதல் நடத்தி வருகின்றது.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுகவின் பொருளாளர் துரைமுருகன் , மக்கள் அவர்களின் பிரச்சனையை அரசிடம் முறையிடுகிறார்கள் ஆனால் அரசாங்கம் அதனை கடவுளிடம் முறையிடுகிறது. அதிமுக அரசால் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியவில்லை என்று அரசு ஒப்புக்கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.