Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அவ விட்டுட்டு போய்ட்டா… விரக்தியில் கணவன் செய்த செயல்… சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த கணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள அரியூர் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத்(28). கூலி தொழிலாளியான இவருக்கு கடகால்புதூரை சேர்ந்த தமிழரசி(21) என்பவருடன் கடந்த 11 மாதங்கள் முன்பு திருமணம் நடந்துள்ளது. இதனையடுத்து திருமணமான சில மாதங்களிலேயே கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட பெரும் வாக்குவாதத்தில் தமிழரசி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதனால் கோபிநாத் மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் கோபிநாத் வீட்டில் அவருடைய அறைக்கு சென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் வெகுநேரமாகியும் அறையிலிருந்து கோபிநாத் வெளியே வராததால் பெற்றோர்கள் சந்தேகம் அடைந்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது கோபிநாத் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரின் உடலை மீட்டு உடனடியாக மோகனூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் அன்பில் ராஜ் மற்றும் காவல்துறையினர் கோபிநாத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |