அமெரிக்காவில் இளைஞர்கள் சிலர் கடற்கரைக்கு சென்றபோது, அங்கு பாறைகளுக்கு இடையே கிடந்த 2 சூட்கேஸ்கசை திறந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அமெரிக்காவில் கடந்த மாதம் பெண் உட்பட இளைஞர்கள் சிலர் கடற்கரைக்கு சென்றபோது அங்கு 2 சூட் கேஸ் கிடந்தது.. அதில் என்ன இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதற்காக ஆர்வமுடன் டிக் டாக் வீடியோவில் பேசிக்கொண்ட படியே அந்த சூட்கேஸ்களை திறந்து பார்க்க நடுங்கிப் போய் விட்டார்கள் அவர்கள்.
அப்படி அதில் என்ன இருந்தது என்று கேட்டால், அந்த 2 சூட்கேஸ்களிலும் மனித உடல்களின் பாகங்கள் துண்டு துண்டாக இருந்தன. உடனே, அவர்களில் ஒரு பெண், போலீசாருக்கு தகவல் கொடுத்து அழைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது அந்த உடல்கள் யாரென்று அடையாள காணப்பட்டுள்ளன. அதாவது, 4 அழகான குழந்தைகளுக்கு தாயான 35 வயது ஜெசிகா லூயிஸ் (Jessica Lewis) மற்றும் 8 ஆண்டுகளாக அவருடன் வாழ்ந்துவந்த அவரது காதலரான 27 வயது ஆஸ்டின் வென்னர் (Austin Wenner) என்பவர்களது உடல்கள் தான் அது..
பிரேத பரிசோதனையில் அவர்கள் இருவருமே துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.. அவர்களை கொலை செய்தது யார்? என்பதை யாராவது சொன்னால், அவர்களுக்கு 10,000 டாலர்கள் (இந்திய மதிப்பு 75,156.10) பரிசளிப்பதாக ஜெசிகா லூயிஸ் உடைய அத்தையான ஜினா ஜாஷ்கே (Gina Jaschke) தெரிவித்துள்ளார்.. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளியை தேடி வருகின்றனர்.