Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“வயல் உழுதுவிட்டு வந்தபோது” டிராக்டரில் பிரேக் பிடிக்காததால்…. 3 உயிர் பலி…!!

டிராக்டரில் இன்ஜின் கோளாறு காரணமாக கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் வசிப்பவர் குமரேசன். டிராக்டர் உரிமையாளரான இவருக்குப் நவீன்(20) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நவீன் சம்பவத்தன்று நீலமங்கலம் கிராமத்தில் ஏரிக்கரை பக்கத்தில் உள்ள வயலில் ஏர் உழுது கொண்டிருந்துள்ளார். பின்னர் வேலை முடிந்ததும் டிராக்டரில் வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்போது அவருடன் நீலமங்கலம் பெரிய காலனியை சேர்ந்த மகாவிஷ்ணு ஹரி (20), டிசா(20) மற்றும் விஷ்ணு ஆகிய 3 பேரும் டிராக்டரில் நவீனுடன் வந்து கொண்டிருந்துள்ளனர்.

அந்த சமயத்தில் டிராக்டரில் ஏற்பட்ட இன்ஜின் கோளாறு காரணமாக பிரேக் பிடிக்காமல் சாலையோரம் இருந்த பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விழுந்துள்ளது. இதில் நவீன் மற்றும் விஷ்ணு டிராக்டர் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். டிசா படுகாயமடைந்துள்ளார். இதில் ஹரி மட்டும் அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் இல்லாமல் உயிர் பிழைத்துள்ளார். இதுபற்றி அணைக்கட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |