Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு தொடங்கிய போது மீட்பு விகிதம் 7.1%… தற்போது 39.62% ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை!

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 42,298 பேர் குணமடைந்துள்ளனர் என்பது திருப்திகரமாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறையின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் தெரிவித்தாவது, ” நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது மீட்பு விகிதம் 7.1% ஆக இருந்தது. தொடர்ந்து ஊரடங்கு 2ம் கட்டமாக அமல்படுத்தப்பட்ட போது மீட்பு விகிதம் 11.42% ஆக இருந்தது. பின்னர் அது 26.59% ஆக உயர்ந்தது. இன்று மீட்பு விகிதம் 39.62% ஆக உயர்ந்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

மேலும் தற்போது வரை கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 61,149 ஆக உள்ளது என இணை செயலாளர் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 5,611 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 140 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர்.உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 11ம் இடத்தில் உள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,06,750 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 37,136 பேரும், தமிழகத்தில் 12,448 பேரும், குஜராத்தில் 12,140 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,303 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 42,298 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |