Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது?… அமைச்சர் செங்கோட்டையன் பதில்…!!

அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பது குறித்து முதலமைச்சரே முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள  சொக்குமாரி  பாளையத்தில்  புதிய பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் கிளை நிலையத்தை  அமைச்சர் செங்கோட்டையன்  திறந்து வைத்தார். கூட்டுறவு சங்கத்தின் கிளையை திறந்து வைத்த பின்  அமைச்சர் செங்கோட்டையன் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான  புதிய விதை நெல் உற்பத்தி நிலையம் மற்றும் சேமிப்பு கிடங்கு அமைக்க  பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

அதனைஅடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ” தமிழக அரசு விவசாயிகள் நலன் காக்கும் அரசு என்றும், தஞ்சையை பாதுகாக்கபட்ட வேளாண்மை மண்டலமாக அரசு அறிவித்ததே இதற்கு உதாரணம் என்றும், மேலும் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |