Categories
அரசியல் மாநில செய்திகள்

போன் வந்துச்சுன்னா…! உடனே ஓடி போய் உதவுங்க… ஸ்டாலின் போட்ட கட்டளை… மெர்சலாகி பேசிய அன்பில் மகேஷ் ..!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, லீடர்ஷிப் என்று சொல்கிறோம்…  நாம் காண்கின்ற கனவு இருக்கின்றது பார்த்தீர்களா ? அந்த கனவை நியாயப்படுத்துகொண்டு, அதை  உண்மையாகின்ற திறமை யாருக்கு இருக்கிறதோ, அவருக்குத்தான் தலைமை பண்பு அந்த தகுதி உண்டு என்று சொல்வார்கள். இன்றைக்கு தான் காணுகின்ற கனவாக இருந்தாலும்,  திராவிடத்தினுடைய கனவாக இருந்தாலும், பொதுமக்கள் எதற்கெல்லாம் ஏங்குகிறார்கள்,  அவருடைய கனவு என்னவாக இருக்குமோ, அதையெல்லாம் சிந்தித்து,  இன்றைக்கு அதற்கு ஒரு செயல் வடிவம் கொடுக்கிறார் அதுதான் நம்முடைய தலைவர் தளபதி அவர்கள்.

இன்றைக்கு தமிழ்நாட்டில் வரலாற்றில் எத்தனையோ தலைவர் இருக்கலாம். ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு தலைவருக்கும் ட்ரெண்ட் இருக்கும். என்னென்ன தேவையோ ? அதையெல்லாம் செய்து கொடுத்துவிட்டு போய்க்கொண்டு இருப்பார்கள். தொலைநோக்கு பார்வையோடு இருந்த ஒரு தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள். இன்றைக்கு அவருடைய வழியில் பல தொலைநோக்கு திட்டங்களை இன்றைக்கு தீட்டி  கொண்டிருப்பவர் தான் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். அதெல்லாம் எங்கே இருந்த அவருக்கு கிடைத்திருக்கும்.

நான் சொன்ன மாதிரி இரண்டு வருடத்திற்கு முன்பு, கொரோனா வந்தது…  கொரோனா வரும்போது,  நாமெல்லாம் ஆட்சியில் கிடையாது. ஒரு இயக்கத்தினுடைய தலைவராக, தமிழினத்தின் தலைவராக ”ஒன்றிணைவோம் வா” என்ற திட்டத்தை தீட்டினார். உடனே தொண்டர்கள், தோழர்கள் எல்லாருமே..  மாவட்ட கழகத்தினுடைய செயலாளர்களிலிருந்து, பகுதி கழக செயலாளர்கள், வட்ட செயலாளர் எல்லோரும் சேர்ந்து…  பொதுமக்களிடமிருந்து ஒரு தொலைபேசி வந்தது என்று சொன்னால்..   உடனடியாக ஓடோடி சென்று உங்களால் என்ன முடியுமோ,  அந்த உதவியை நீங்கள் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள்.

தொலைபேசியில் இருந்து யாராவது பேசி,  எனக்கு அது வேண்டும் என்று சொன்னால், அவர்கள் எந்த கட்சி என்று தெரியாது, இந்த சாதி, என்ன மதம் ? எதுவுமே தெரியாது. உடனடியாக எங்கள் தலைவர் சொல்லிவிட்டாருங்க.. இந்தாங்க உங்களுக்கு ஒரு கிலோ அரிசி என்று கொடுத்துட்டு வந்த இயக்கம் தான் நம்முடைய இயக்கம் என்று சொல்லும்போது, நம்மளை அப்படி வளர்த்திருக்கக்கூடிய யார் என்று சொன்னால்,  இன்றைக்கு இரண்டாவது முறையாக… ஏன் இரண்டாவது முறை ? தொடர்ந்து அவர் தான் தலைவராக இருக்கப் போகிறார், அதற்கான பாராட்டு கூட்டத்தை தொடர்ந்து நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அண்ணன் அவர்கள் எடுத்துக் கொண்டே தான் இருக்கப் போகிறார் என்று தெரிவித்தார்.

Categories

Tech |