திருமணமான பெண் இறந்தால் அவரது தாய் சட்ட படி வாரிசாக முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை அமைஞ்சகரையை அடுத்துள்ள பிவிஆர் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணா. இவரது மனைவி விஜயலட்சுமி கடந்த 2013ம் ஆண்டு இறந்த நிலையில் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழில் அவரது தாயாரின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணா வழக்கு தொடுக்க, நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கணவன் இறந்துவிட்டால் மனைவி குழந்தை மட்டுமின்றி அவரது தாயாரும் சட்டபடி வாரிசுகள் ஆவர் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. மேலும் ஆணுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று கூறிய நீதிபதி பெண்கள் இறந்தால் அவரது கணவர் குழந்தைகள் மட்டுமே சட்டபூர்வ வாரிசாக முடியும் என கூறியது. மேலும் விஜயலட்சுமியின் வாரிசு சான்றிதழை இரத்து செய்தும், அவர்கள் தாயார் பெயர் நீக்கப்பட்ட புதிய சான்றுகளை பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.