நாம் கடவுளை வணங்கும் போது நம் கண்களில் இருந்து கண்ணீர் வந்தால் அதற்கு என்ன அர்த்தம் என்பதை பற்றிய இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.
மனதில் பல கஷ்டங்கள் இருக்கும்போது, அமைதியற்ற சூழ்நிலை நிலவும் போது நாம் கடவுளை தேடிச் செல்கிறோம். கோவிலுக்கு செல்கிறோம். மனவுளைச்சல் காரணமாக சிலர் கோவிலுக்கு செல்ல விரும்புகின்றனர். கடவுளை பார்த்து நாம் மனமுருகி வேண்டி வந்தால் நமது கஷ்டம் தீரும் என்று சிலர் நினைக்கின்றனர். அதற்காக கோவிலுக்கு செல்கின்றனர், அப்படி கோவிலுக்குச் சென்று அல்லது வீட்டில் பூஜை அறையில் நாம் கடவுளை மனதார நினைத்து வேண்டும் பொழுது நமது கண்களில் இருந்து கண்ணீர் வரும்.
அதற்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு பிடித்த கடவுளை நீங்கள் வழிபடும் பொழுது உங்களுக்கு அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வந்தால் கடவுள் உங்களுக்கு ஏதோ உங்களிடம் சொல்கிறார்கள் என அர்த்தம். கடவுள் உங்களிடம் ஒரு குறிப்பை கொடுக்கிறார் என்று பொருள். அதை நீங்கள் புரிந்து கொண்டால் உங்கள் பிரச்சனை நீங்கிவிடும். உங்கள் வேண்டுகோளை கடவுள் ஏற்றுக் கொண்டார் என்று பொருள். கண்களிலிருந்து கண்ணீர் வரும் பொழுது பிரார்த்தனை வெற்றிகரமாக முடிந்துவிட்டது என்று அர்த்தம். இனி எல்லா பிரச்சினைகள் நீங்கி உங்கள் ஆசைகள் நிறைவேறும் எனவும் நம்பப்படுகின்றது.