Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எப்போ தான் நிறுத்துவங்க… போலீசாருக்கு கிடைத்த தகவல்… அதிரடி சோதனை…!!

நாமக்கல் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் வைத்து சாராயம் காய்ச்சிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்துள்ள முனியப்பம்பாளையம் பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட சூப்பிரண்டு அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூரின் உத்தரவின்படி நாமக்கல் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பூர்ணிமா தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த செல்வராஜ்(51) என்பவர் சாராயம் காய்ச்சுவது தெரியவந்துள்ளது.

மேலும் அவர் காய்ச்சிய 30 லிட்டர் சாராயத்தையும், 300 லிட்டர் சாராய ஊறலையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கந்தம்பாளையம் அருகே ரங்கநாதபுரத்தில் வசிக்கும் பொன்னுசாமி(37) என்பவர் சாராயம் காய்ச்சியதாக நல்லூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொன்னுசாமி வைத்திருக்கும் சுண்ணாம்பு சூளை அருகில் உள்ள கொட்டகையில் பெரிய மண்பானையில் 35 லிட்டர் சாராய ஊறல் போட்டு வைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் அவரை கைது செய்த போலீசார் சாராய ஊறலையும் அழித்துள்ளனர்.

Categories

Tech |