Categories
கிரிக்கெட் விளையாட்டு

புலியின் புகைப்படத்தை வெளியிட்ட சிஎஸ்கே சிங்கம்!

மத்திய பிரேசத்தில் உள்ள புலிகள் காப்பகத்திற்குச் சென்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, புலி உறுமும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்த தோனி, இந்திய அணிக்காக களமிறங்கி 6 மாதங்கள் கடந்துவிட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பிறகு அவர் இந்திய அணியில் இடம்பிடிக்காமல் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்துவருகிறார்.

பலரும் தோனியின் எதிர்காலம் குறித்து பலவிதமான கருத்துகளை தெரிவித்துவந்தாலும், அவர் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழிப்பதில் கவனம் செலுத்திவருகிறார். அந்தவகையில், மத்திய பிரேதசத்தில் உள்ள கன்ஹா புலிகள் காப்பத்துக்கு சென்றுள்ள தோனி, அங்கிருந்த புலி ஒன்று உறுமுகையில் அதை புகைப்படமாக எடுத்துள்ளார்.

பின்னர் அந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி வெளியிட்டார். அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஆறு மாதங்கள் எந்த போட்டிகளிலும் விளையாடமல் இருந்த தோனி, அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் மீண்டும் ரிஎன்ட்ரி தரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/B8i2DhXlwW0/?utm_source=ig_web_button_share_sheet

Categories

Tech |