Categories
சினிமா தமிழ் சினிமா

பூஜையுடன் தொடங்கிய “தளபதி 65″…. படப்பிடிப்பு எப்போது….? வெளியான தகவல்…!!

தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து தளபதி65 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். இந்நிலையில் தளபதி 65 படத்தின் பூஜை இன்று தொடங்கியது.

ஆனால் தற்போது தேர்தல் சமயம் என்பதால் இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் 6ஆம் தேதிக்கு படக்குழு ஒத்திவைத்துள்ளது. தளபதி 65 திரைப்படத்தின் பல காட்சிகள் ரஷ்யாவில் எடுக்க படக்குழு திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருவதால் ரஷ்யாவில் குறிப்பிட்ட சில காட்சிகள் மட்டும் எடுத்துவிட்டு, மீதமுள்ள காட்சிகளை சென்னையில் ரஷ்யாவை போல அரங்கு அமைத்து படப்பிடிப்பு நடத்த உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |