Categories
அரசியல் மாநில செய்திகள்

எப்போ, எப்போ ? என கேட்டுட்டே இருந்த உதயநிதி…! நீ வா பா என சட்ரென்று வந்த பதில்…!!

திமுக இளைஞரனி சார்பாக நடந்த பாசறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய  இளைஞரனி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,  அண்ணன் அன்பரசன் அவர்கள் என்னிடத்திலே தேதி வாங்கும் பொழுது உன் பயிற்சி பாசறை கூட்டத்தில் பெருசா கலந்துக்கறது இல்ல, நான் முதல் கூட்டத்தில் கலந்துக்கிட்டேன். அதன் பிறகு சென்ற மாதம்,  திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட நம்முடைய அக்கா அருள்மொழி அவர்கள் பேசிய கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன்.

அண்ணன் வேலு அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று அன்பரசன் அவர்கள் உரிமையோடு என்னிடம் வந்து தேதி கேட்டார். நான் அவரிடம் கேட்டுக்கிட்டே இருந்தேன். அண்ணண்… என்ன ? உங்க சட்டமன்றத்தில் நடத்தவே இல்லை என கேட்டேன்.  அவர் உரிமையோடு சொல்லிட்டாரு நீ வந்தா தான் பா நான் நடத்துவேன் அப்படின்னு…  இங்கே நம்முடைய மாவட்ட அமைப்பாளர் கார்த்தி அவர்கள் பேசும்போது கூட சொன்னார்கள்,  நம்முடைய அன்பரசன் அவர்கள் இளைஞர் அணிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள்,

இளைஞர் அணி நிர்வாகிகளை எல்லாம் எப்படி ஊக்கப்படுத்துவார்கள் ? அவர்களை எப்படி வேலை வாங்குவார்கள் ? அந்த உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரத்தை எப்படி எல்லாம் கொடுப்பார்கள் என்று பேசினார்கள். உள்ளாட்சித் தேர்தலில் கூட எத்தனை பேருக்கு அந்த வாய்ப்பை எல்லாம் அளித்து, அவர்களை வெற்றி பெற செய்து அழகு பார்த்தார்கள் என்று திரு கார்த்திக்கு அவர்கள் இங்கே பெருமையாக பேசினார்கள்.

எல்லா மாவட்ட அமைப்பாளருக்கும் இப்படி ஒரு மாவட்ட செயலாளர் அமையமாட்டார். அன்பரசன் அவர்கள் இளைஞர் அணியில் இருந்து வந்ததுனால அவருக்கு தெரியும்.  எவ்வளவு கஷ்டம் அப்படின்னு…  இந்த நேரத்துல அன்பரசன் அவர்களுக்கு நான் என்னுடைய தனிப்பட்ட முறையில் என்னுடைய வாழ்த்துக்களையும்,  இந்த சிறப்பான நிகழ்ச்சியிலே எனக்கு கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பளித்த மீண்டும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

Categories

Tech |