கமல் ‘விக்ரம்’ படபிடிப்பில் இந்த மாத இறுதியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் தற்போது ”விக்ரம்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இதனையடுத்து, இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த கமல் தற்போது தனிமைப்படுத்துதலில் இருக்கிறார். இந்நிலையில், இவர் ‘விக்ரம்’ படபிடிப்பில் இந்த மாத இறுதியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.