Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘நவரசா’ ரிலீஸ் எப்போது….? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

‘நவரசா’ வெப் தொடரின்  ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான மணிரத்னம், ஜெயேந்திரா, கார்த்திக் சுப்புராஜ், வசந்த் சாய், பியாஸ் நம்பியார், பிரியதர்ஷன், கௌதம் மேனன், அரவிந்த்சாமி உள்ளிட்ட 8 இயக்குனர்களின் இயக்கத்தில் ‘நவரசா’ எனும் ஆந்தாலஜி வெப் தொடர் உருவாக்கி வருகிறது.

இதில் சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, பாபி சிம்ஹா, பிரகாஷ்ராஜ், அசோக் செல்வன், அதர்வா, நித்யா மேனன், பார்வதி, ரம்யா நம்பீசன், பிரசன்னா, அதிதி பாலன், ரித்விகா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நவரசா வெப் தொடரின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இந்த வெப் தொடரின் டீசரை வெளியிட்டு நவரசா வெப் தொடரின் ரிலீஸ் தேதியையும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி நெட் பிலிக்ஸ் தளத்தில் நவரசா வெப் தொடர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |