10ஆம் வகுப்பு பொத்தேர்வுக்கான அறிவிப்பை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.
சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 10ஆம் வகுப்பு பொதுதேர்வு குறித்த அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டார். அதே போல விடுபட்ட +1, +2 பொதுத்தேர்வில் தேதியையும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
அதே போல நீட் தேர்வை பொருத்தவரை பயிற்சி வகுப்புகள் தமிழகம் முழுதும் உள்ள 10 கல்லூரிகளில் இதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பயிற்சி வகுப்புகள் என்பது விரைவில் தொடங்கப்படும் அதற்கு அதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தனது செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அமைச்சரின் பேட்டியில் மற்றொரு மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்பட வேண்டியது வழக்கமாக கல்வி ஆண்டை பொருத்தவரை ஜூன் மாதத்திலேயே தொடங்கிவிடும். ஆனால் தற்போது கொரோனா நோய் தொற்றுவது அதிகமாக இருக்கக் கூடிய நிலையில் கல்வியாண்டு எப்போது தொடங்கப்படும் என்ற எந்த முடிவையும் தமிழக அரசு எடுக்கவில்லை என்ற ஒரு விஷயத்தையும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தற்போது பேட்டியில் சொல்லியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில் தமிழகத்தைப் பொருத்தவரை பள்ளிகளை திறக்க கூடிய தேதி என்பது தற்போது வரை முடிவு எடுக்கப்படாத நிலையில் ஜூலை மாதத்திற்கு மேலாக தான் பள்ளிகள் மீண்டும் இயங்கும் என்ற ஒரு கேள்வியும் தற்போது எழுந்திருக்கிறது. அமைச்சரின் பேட்டியும் இதனையே உறுதி படுத்தியுள்ளது.