தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு குறித்து நாளை முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தமிழக முதல்வர் கடந்த 28 ஆம் தேதி திரையரங்கு திறப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மாவட்ட ஆட்சியருடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தியுள்ளார். அதன் பிறகு மருத்துவ குழுவினரிடமும் ஆலோசனை நடத்தப்பட்டு இது தொடர்பான அறிக்கையை முதல்வர் பெற்றுள்ளார். தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கலாமா? என்று பல்வேறு விஷயங்கள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தன. இந்த நிலையில் தளர்வு என்னென்ன அறிவிக்கலாம் என்றெல்லாம் அந்த ஆய்வறிக்கை குறித்து முதலமைச்சர் முடிவெடுக்க இருக்கின்றார். நாளை நல்ல முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். இதனால் நாளை திரையரங்கு திறக்கப்படுமா?.. என்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.