நாடு முழுவதும் திரையரங்குகள் திறப்பது குறித்து மத்திய அரசு வழங்கும் ஆலோசனையை தமிழ்நாடு பின்பற்றும் என கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தியேட்டர்கள் எப்பொழுது திறக்கலாம் என்று கேள்விக்கு, கோவில்பட்டி அருகே உள்ள எட்டயாபுரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது, “தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவதால் தியேட்டர்கள் மூடப்பட்டன.
மேலும் தியேட்டர்கள் எப்போது திறக்கலாம்? என மத்திய அரசு செப்டம்பர் 1ந்தேதி ஆலோசனை நடத்த இருக்கிறது.” இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். நடத்தப்படும் ஆலோசனையில் மத்திய அரசு என்ன வழிகாட்டுதல் கூறுகிறதோ அதன்படி தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.