Categories
அரசியல் மாநில செய்திகள்

எப்போ பார்த்தாலும் ஓடிக்கிட்டே இருக்காரு…! பார்த்ததும் பொறாமை பட்ட அமைச்சர்… DMKவில் இப்படி ஒரு ஆளா?

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, சும்மா எல்லாம் முதலமைச்சர் நம்முடைய இயக்கத்தில் வந்து செயல் பாபு என்ற சாதாரணமாக சொல்லிட்டு போகவில்லை.

அந்த வார்த்தைக்கு 100% அந்த வார்த்தையை உண்மை என்பதை நிரூபிக்கின்ற ஒரு கூட்டம் தான், யாரால் இந்த மாதிரி முற்போக்கு தலைவர்கள் எல்லாம் ஒரே மேடையில் உட்கார வைத்து உரையாற்றுவதற்கான அந்த திறமை உண்டு, என்று சொன்னால் அது நம்முடைய அண்ணன் சேகர் பாபு அவர்களுக்கு தான் உண்டு. நாமும் தொடர் பேப்பரை பார்க்கும்போதெல்லாம் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் இருக்கின்ற மற்ற மாவட்ட செயலாளர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டு மாவட்ட செயலாளராக  இருப்பவர் தான் அண்ணன் அவர்கள்.

இப்படி தொடர்ந்து அதை பார்க்கும்போது அதில் நாம் ஒரு பத்து சதவீதம் நம்முடைய திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு செய்து விட மாட்டோமா? செய்துவிட முடியாதா ? என்று ஏங்குகிறோம், அதை பார்க்கும்போது நம்மளும் இது போல் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். பல நேரங்களில் என்னுடைய கூட்டங்களிலே செயற்குழு கூட்டத்தில் பேசும்போது,  நான் மறக்காமல் இவரது பேரை சொல்லி, சொல்லி பேசுவேன். சென்னையில் ஒருவர் இருக்கிறார், நாம் போகும் போதெல்லாம் அவ்வளவு பொறாமையாக இருக்கிறது.

எப்போது பார்த்தாலும் எப்படித்தான் ஓடிக்கொண்டே இருக்கிறார் என்று தெரியவில்லை. தினமும் ஒரு கூட்டம், தினமும் ஒரு ஆய்வு, பேப்பரை பார்த்தால் திருச்செந்தூரில் சஷ்டிக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார். 4 LED வைத்து அதை நாம் லைவா காட்ட போகிறோம், அதோட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்கிறார். அப்படியே முற்றிலும் பார்த்தால் இங்கே வந்து திராவிட இயக்கத்தினுடைய வரலாறுகளை பேசுகின்ற அளவிற்கு ஒரு பெரிய மேடை,

இப்படி தொடர்ந்து தன்னுடைய இயக்கத்தை சார்ந்து இருக்கின்ற மாவட்ட கழக செயலாளராக இருந்தாலும், இன்றைக்கு மாண்புமிகுவாக இருக்கின்ற துறையுட அமைச்சராக… துறையை சார்ந்திருக்கின்ற செயலாக இருந்தாலும் தொடர்ந்து அவர்கள் செய்கிறார் என்று சொன்னால், அந்த ஆக்கத்தையும், ஊக்கத்தையும், எங்கே பெற்றார் என்று சொன்னால்,  நம்முடைய தளபதி இடம் என்று நாம் பெருமையோடு சொல்ல முடியும் என தெரிவித்தார்.

Categories

Tech |