பிரிட்டனிலிருந்து தெலுங்கானா வந்த 279 பேர் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. இதனால் பிரிட்டனின் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்துகளை பல நாடுகள் தடை செய்துள்ளன. அதேசமயம் இங்கிலாந்திலிருந்து வருபவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் இதுவரை 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களுக்கு உருமாறிய கொரோனா உள்ளதா? என்பதை அறிய அவர்களின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்திலிருந்து தெலுங்கானா மாநிலம் வந்த 279 நபர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் பிரிட்டனில் இருந்து வந்த 154 பேர் தவறான தொலைபேசி எண்கள் மற்றும் தவறான முகவரியை கொடுத்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இதனால் சுகாதார அதிகாரிகள் தங்களுடைய தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.