வீட்டின் சமையலறையில் இந்த பொருட்களை எந்த இடத்தில வைக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
நாம் நமது வீட்டில் எப்போதுமே இந்த மூன்று பொருட்களையும் சரியான இடத்தில வைத்திருந்தோம் என்றால் எப்போதுமே நம் வீட்டில் சுபிக்ஷம் இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரங்கள் ரீதியாக சொல்லப்படுகின்றது.
உப்பு :
உப்பு மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. சமயலறையில் உப்பை கண்ணாடி அல்லது பீங்கான் பாட்டிலில் போட்டு அடுப்பு மேடைக்கு வலது புறமாக வைக்க வேண்டும். ஆனால் பிளாஸ்டிக் பாட்டிலில் போட்டு வைத்தால் அதற்கான விளைவுகளை நாம் சந்திக்க வேண்டியது இருக்கும்.
தோசை கல் மற்றும் இரும்பு சட்டி:
இது மாதிரியான இரும்பு பாத்திரங்களை அடுப்பு மேடையின் வலதுபுறமாக உள்ள இடத்தில் அடுக்கி வைக்க வேண்டும். ஏனென்றால் இரும்பு என்பது சனி பகவான் மற்றும் கேது பகவானுக்கு உரியது. சனி மற்றும் கேதுவின் பாதிப்புக் உங்களுக்கு குறைவாக இருக்க வேண்டும் என்றால் இதை கட்டாயமாக பின்பற்றுங்கள்.
அரிசி:
நாம் சமைக்கும் அரிசியானது அன்னபூரணி தாயாருக்கு நிகராக சொல்லப்படுகிறது. இந்த அரிசி அடைத்து வைத்திருக்கும் பாத்திரத்தை அடுப்பு மேடைக்கு கீழே குனிந்து எடுக்கும் படி வைக்க வேண்டும். இது தான் நம் சாப்பிடும் உணவான அரிசிக்கு கொடுக்கும் முதல் மரியாதையை ஆகும்.
எனவே இது மாதிரியான பாதிப்புகள் உங்களுக்கு வராமல் இருக்க வேண்டுமென்றால், இந்த 3 பொருட்களையும் சரியான இடத்தில வைக்க வேண்டும். பொதுவாக சமையல் அறை கிழக்கு பார்த்து இருப்பது தான் நல்லது.