நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் சீமான், இன்றைக்கு பெருமைமிக்க தலைவர் அமைச்சர், அன்றைக்கு பாசிஸ்ட் அதே மோடி தானே. அன்றைக்கு பாசிஸ்டா இருந்தவர் இன்றைக்கு நாட்டின் மிகச்சிறந்த தலைவராக எப்படி தெரிகிறது ? அவர் கையில் பட்டம் வாங்குவது எப்படி பெருமையாக எப்படி படுது ? இதுதான் திராவிட மாடல்.
சந்தர்ப்பவாதம், சூழ்நிலை வாதம், தன்னலவாதம் இதுதான் நடக்கப்போகுது. இதான் நடக்கும் என்று தெரியாதா ? அவர்களுக்கு சீமான் வந்தால்… நாம் தமிழருக்கு ஓட்டு போட்டால் பிஜேபி வந்துரும் என்று பேசியவர்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள் ?
உங்கள் ஊரில் சொல்வார்கள் பிச்சை எடுக்கிற மாதிரி கனவு கண்டால் யாரிடமும் பெருமையாக சொல்ல முடியாது. அது மாதிரி இப்படி பேசினவர்கள் எல்லாம் என்ன செய்ய வேண்டும் என்றே தெரியவில்லை.திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் மாண்புமிகு முதல்வர் அவர்களை, துறை சார்ந்த அமைச்சர்களை, நாட்டின் பாரத பிரதமர் மோடி அவர்களை…
ஒரே ஒரு முறை இப்போது ஊடகத்தை சந்திக்க சொல்லுங்கள். எந்த கேள்விக்கும் பதில் இருக்காது. என்ன வழி ? யாரும் அதைப் பற்றி பேசக்கூடாது; அது விவாதத்திற்கு எடுக்கக் கூடாது; அதை பற்றி எழுதக்கூடாது; எழுதினால் தண்டனை. அதன் ஜனநாயகம். இந்த ஜனநாயகத்தை காப்பாற்ற தான் இவர்கள் இவ்வளவு போராடிக் கொண்டிருக்கிறார்கள். நாம் அவருக்கு வாக்கு செலுத்திக் கொண்டிருக்கிறோம். நபிகள் சொல்கிறார்கள்…. ஒரு காலம் வரும்; அது அழிவு காலம்;
அப்போது கொடுங்கோலான அமைச்சர்கள் துரோகம் இழைக்கும் நீதிபதிகள், பொய்யுரைக்கும் சட்ட வல்லுநர்கள் வருவார்கள். தோன்றுவார்கள், அவர்கள் காலத்தில் வாழ நேரிட்டால் நீங்கள் வரி செலுத்தாதீர்கள் என்று சொல்லுகிறார். இப்போ… நபிகளிடத்தில் நாம் என்ன சொல்ல வேண்டியது இருக்கிறது ? எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள் நபிகள் நாயகம் அவர்களே…
வரி செலுத்தாமல் வாழ முடியாது நாங்கள்… பிறப்பதே இந்த நாட்டில் வரி செலுத்துவதற்காக தான்… ஆனால் ஒன்று செய்யலாம்; இந்தப் பாவிகளுக்கு வாக்கு செலுத்தாமல் தப்பித்துக் கொள்ளலாம். அதையாவது இவர்கள் இனி வரும் காலங்களில் செய்யலாம். வேற வலி கிடையாது என விமர்சித்தார்.