தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் அவ்வளவாக தற்போது வாய்ப்புகள் இல்லாத நிலையில் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகை தமன்னா தன்னுடைய திருமணம் குறித்து தற்போது ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, நான் தற்போது சினிமாவுக்கு வந்து 17 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இத்தனை வருடங்கள் சினிமாவில் நான் நீடிப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.
நான் சிறிய ஹீரோ, பெரிய ஹீரோ என்ற வித்தியாசமெல்லாம் பார்க்க மாட்டேன். என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் அப்படத்தில் நடிப்பேன். பொதுவாக பெண்களுக்கு திருமண வயது வந்தவுடன் எப்போது திருமணம் என்ற கேள்வி பலரது மத்தியிலும் இருக்கும். என்னுடைய வீட்டில் கூட எனக்கு வரன் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அவர்கள் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தும் நிலையில், நான் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை. எனவே சோசியல் மீடியாவில் என்னுடைய திருமணம் குறித்த வதந்திகளை பரப்ப வேண்டாம். முதலில் எனக்கு டாக்டருடன் திருமணம் செய்து வைத்தார்கள். இப்போது தொழிலதிபருடன் திருமணம் செய்து வைக்க பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும் என்னுடைய திருமணம் குறித்து நேரம் வரும்போது நானே சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.