ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட வந்த மகனை பெற்றோர் கண்டித்ததால் அவர்களை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் குருதோலா என்ற கிராமத்தில் வசித்து வரும் ஜவாத் அலி என்பவரின் மனைவி இரா பாய். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார். முதல் மகன் ஆரிப் முகமது கொல்கத்தாவுக்கு வேலைக்கு சென்றுள்ளார். இரண்டாவது மகன் ஆசிப் முகமது பன்னிரண்டாம் வகுப்பு, படித்து முடித்துவிட்டு ஆன்லைனில் சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இது அவரது பெற்றோர்களுக்கு பிடிக்காத காரணத்தினால் தொடர்ந்து அவரை திட்டித் வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஆசிப், பெற்றோர்களை கொலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்.
இதையடுத்து தனது தாய், தந்தை, உடன் பிறந்த சகோதரி மற்றும் பாட்டி என்ற அனைவருக்கும் குளிர்பானத்தில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து, பிறகு அவர்களின் கைகளை கட்டி வீட்டின் அருகே உள்ள ஒரு குளத்தில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு, அந்த உடல்களை அங்கேயே குழி தோண்டி புதைத்து இருக்கிறார். இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள தனது சகோதரர் ஆரிப் முகமதுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு இதுபற்றி கூறியுள்ளார்.
மேலும் தனது வீட்டை சுற்றி சிசிடிவி கேமராவை பொருத்தி அக்கம்பக்கத்தினர் நடவடிக்கைகளையும் கவனித்து வந்துள்ளார். கொல்கத்தாவில் இருந்து திரும்பிய ஆரிப் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பெற்றோர்கள் இறந்து நான்கு மாதம் ஆன நிலையில் தற்போது வந்து அவர் புகார் அளித்ததால் அவர் மீதும் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்த சகோதரர் தலைமறைவாகி விட்டதால், அவரை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்பு கைது செய்தனர். பிறகு சடலங்களை தோண்டி எடுத்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.