Categories
சினிமா தமிழ் சினிமா

“இவ்வளவு பணம் எங்கிருந்து வந்துச்சு”…..‌ பெரும் சிக்கலில் ஷார்மி, பூரி ஜெகன்னாத்…..‌15 மணி நேரம் அதிரடி விசாரணை…..!!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான லைகர் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இந்தப் படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். அதன் பிறகு நடிகை சார்மி மற்றும் பூரி ஜெகன்நாத் ஆகியோர் இணைந்து படத்தை தயாரித்திருந்தனர். சுமார் 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லைகர் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் லைகர் படத்தில் பல அரசியல்வாதிகள் தங்களுடைய கருப்பு பணத்தை வெள்ளை பணமாக  மாற்றுவதற்காக போட்டதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த Bakka judson என்பவர் புகார் கொடுத்திருக்கிறார்.

அந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை நடிகை சார்பில் மற்றும் பூரி ஜெகன்நாத் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினம் நடிகை சார்மி மற்றும் பூரி ஜெகன்நாத் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். அவர்களிடம் சுமார் 15 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் வெளிநாட்டிலிருந்து, பணம் வந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் சினிமாவில் கருப்பு பணப்புழக்கம் இருக்கிறது என்ற ஒரு பேச்சு நிலவினாலும் அது தொடர்பான உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Categories

Tech |