தமிழகத்தில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. ஏற்கனவே 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் குணமடைந்துள்ளனர். இன்று காலை 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்த எண்ணிக்கை 74ஆக உயர்ந்த நிலையில் மேலும் 50பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என்று தமிழக சுதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 45 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். ஏற்கனவே 74 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா பாதித்தவர்கள் உடல்நிலை சீராக உள்ளது. யாரும் அவசர சிகிச்சை பிரிவில் இல்லை. டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 1,131 பேரில் 515 பேர் கண்டறியப்பட்டுள்ள நிலையில் மேலும் 616 பேரை கண்டறிய வேண்டியுள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1,131 பேரில் 516 பேர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.