ஆர்டர் செய்த உணவு தாமதமாக வந்ததால் ஊழியரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பிரான்ஸ்ஸில் அரங்கேறியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசின் புறநகர் பகுதியில் உள்ள நொய்ஸி-லே-கிராண்ட் நகரில் ‘மிஸ்ட்ரல்’ என்ற பெயரில் சிறிய துரித உணவு ஓட்டல் செயல்பட்டு வருகின்றது. இங்கு ‘சாண்ட்விச்’ மற்றும் ‘பீட்சா’ போன்ற துரித உணவுகள் அமோகமாக விற்பனை செய்யப்படும். இங்கு கடந்த வெள்ளிக்கிழமை மாலை சாபிட வந்த ஒரு நபர் ஓட்டல் ஊழியரிடம் ‘சாண்ட்விச்’ ஆர்டர் செய்துள்ளார். தான் ஆர்டர் செய்த சாண்ட்விச் உணவு வெகு நேரம் ஆகியும் பரிமாற படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் ஓட்டல் ஊழியரை அழைத்து தாமதம் ஆவது குறித்து வினவினார். அப்போது இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு முற்றவே கோபத்தின் உச்சிக்கு சென்ற வாடிக்கையாளர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் ஊழியரை சுட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார் .குண்டு பாய்ந்த ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து அந்த பகுதி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.