Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்க கூட்டணி ஸ்டராங்…! ஒரு குடும்பம் போல இருக்கோம்… கெத்து காட்டிய அழகிரி …!!

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி திமுக கூட்டணியில் நெருக்கடியும் இல்லை நெருடலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியதாவது,வரும் 14ஆம் தேதி பொங்கல் தினத்தன்று மதுரையில் கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொள்வார். இந்நிகழ்ச்சி “ராகுலின் தமிழ் வழக்கம்” எனும் பெயரில் நடைபெறும்.

ராகுல் காந்தி தமிழர்களின் கலாச்சாரத்தை மட்டுமே பார்ப்பதற்கு வருவதால் தேர்தல் பரப்புரையில் ஈடுபட மாட்டார். மீண்டும் தமிழகம் வரும்போது தான் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவார். எனவே ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திக்கும் திட்டம் இல்லை. காங்கிரஸ் தலைவர்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட இம்முறை மாபெரும் அளவில் பிரச்சாரம் செய்வார்கள்.

தேர்தல் நெருங்கும் போது பிரியங்கா காந்தியும் தமிழகத்திற்கு அழைப்போம். கூட்டணி குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்திற்கு, கூட்டணி என்பது குடும்பப் பாசம்,கொள்கை பாசம் கொண்டது. திமுக கூட்டணியில் நெருக்கடியும் இல்லை என் நெருடலும் இல்லை என்று கூறி எவ்வளவு தொகுதிகளை பெற வேண்டும் என்று எங்களது கூட்டணிக்குள் இணைந்து பேசி முடிவு செய்து கொள்வோம். ஆனால் அதிமுகவில் இன்னும் முதலமைச்சர் வேட்பாளரையே முடிவு செய்யவில்லை என்று கூறினார்.

Categories

Tech |