திண்டிவனத்தில் போக்குவரத்து துறை அதிகாரி என கூறி இருசக்கர வாகனங்களில் செல்வோரிடம் பணம் பறிப்பில் ஈடுபட்டு வரும் நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திண்டிவனம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவர் புதன்கிழமை மாலை திண்டிவனத்தில் இருந்து வீடு நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தருணத்தில் அவரை வழிமறித்த ஒரு நபர் தலைக்கவசம் அணியவில்லை என கேட்டவாறு அவரிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு காவல் நிலையத்தில் வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறி சென்றுள்ளார்.
காவல் நிலையத்திற்கு சென்ற பிறகு அந்த நபர் போலியான போலீஸ் என்பது பெருமாளுக்கு தெரியவந்திருக்கிறது. இதே போல் சாமிக்கண்ணு என்பவரும் மகளின் திருமணத்திற்காக மளிகை பொருட்கள் வாங்க 4000 ரூபாய் பணத்துடன் திண்டிவனம் சென்றுள்ளார். அவரிடமும் இதே பாணியில் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நிஜ போலீசார் போலி போலீசை தீவிரமாக தேடி வருகின்றனர்.