Categories
மாநில செய்திகள்

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும்… மக்களுக்காக ஒரே கட்சி ADMKதான்.. பெருமையாக பேசிய எடப்பாடி…!!

செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கே.பழனிசாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்  ஆட்சியில் இருந்தாலும் சரி,  இல்லாவிட்டாலும் சரி மக்களுக்கு துன்பம் ஏற்படுகின்ற போது வேதனை ஏற்படுகின்ற போது, அவர்களை உடனடியாக மீட்டெடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்கின்ற ஒரே கட்சி அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழக கட்சி என்பதை நான் இந்த நேரத்திலேயே நினைவு படுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.

வெள்ள நீரால் பாதிக்கப்படுகின்ற பொது மக்களுக்கு நிரந்தர தீர்வு என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி கே. பழனிச்சாமி, நிரந்தர தீர்வை பொருத்தவரைக்கும் நம்முடைய முன்னாள் அமைச்சர் தங்கமணி அவர்கள், ஆற்றங்கரையோரம் வசிக்கின்ற வசிக்கின்ற சுமார் 1000 வீடுகளுக்கு மாற்று இடம் கொடுத்து அவர்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து இருக்கின்றார். அதேபோல குமாரபாளையத்திலும், பவானியிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு…

பாதிப்புக்குள்ளாகாத இடத்தை தேர்வு செய்து அங்கு தங்க வைப்பதற்கான முன்னேற்பாடுகளை எங்கள் அரசு இருக்கும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்தோம். ஆனால் வேலை காரணமாக சில மக்கள் அங்கேயே இருக்க வேண்டும் என்று இருக்கின்றார்கள்.  இருந்தாலும் அவ்வப்போது வெள்ளம் ஏற்படுகின்ற போது அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பது அரசின் கடமை.

மக்களுக்கு  1000 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடுகளில் மக்கள் சென்று வசிக்கிறார்கள். ஆனால் சில பேர் அவர்களுடைய வேலை நிமித்தமாக நகரத்துக்கு அருகிலேயே இருந்தால் வேலைக்கு செல்ல முடியும் என்பதற்காக அங்கேயே இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசு உரிய முறையில் அறிவுரை வழங்கி, வேறு இடத்திற்கு செல்வதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தால் அவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.

Categories

Tech |