Categories
தேசிய செய்திகள்

“மக்கள் தொகை கணக்கெடுப்பு”… இந்த வருட பணிகள் தொடருமா?…!

மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் தள்ளி வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்ற வருடம் வரை இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் தற்போது இருக்கும் சூழலில் கணக்கெடுப்பு என்பது கேள்விக்குறியான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் 130 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில், வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியில் 30 லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டிய கட்டாயம் இருந்து வருகிறது.

இந்த ஆண்டிற்கான கணக்கெடுப்பு சென்ற ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை நடைபெற வேண்டிய இந்த பணி கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. கணக்கெடுப்பில் ஈடுபட்டு செயலாற்றும் அரசு ஊழியர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால், இந்த கணக்கெடுக்கும் பணியை மேலும் ஒரு வருடத்திற்கு தள்ளிவைக்கலாம் என மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ இறுதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |