தமிழகத்தில் மே 11-ம் தேதி அதாவது திங்கட்கிழமையில் இருந்து எது இயங்கும்? எது இயங்காது என்று தெரிந்து கொள்ளலாம்.
அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடை என்று எடுத்துக்கொண்டால், அதாவது காய்கறி, மளிகை கடை இயங்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அந்த கடை செயல்படலாம். தனிக்கடைகள் நேரம் அதிகரிப்பு பெரிய பெரிய ஷாப்பிங் மால் நிறைய கடைகள் இருக்கும். அதை தவிர நம்ம வீட்டு பக்கத்துல இருந்த அத்தனை கடைகளும் தனிக்கடைகள் தான்.
சென்னை காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிக்கும், தமிழகத்தின் மற்ற பகுதிக்கும் வேறுவேறு நேரங்கள். முதல்ல சென்னை என்று நாம் எடுத்துக் கொண்டால் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம். சென்னையை தவிர மற்ற பகுதிகள் என்று எடுத்துக்கொண்டால் அரை மணி நேரம் முன்னாடி கடையை திறக்கலாம். ஒரு மணி நேரம் பிறகு கடையை அடைக்கலாம். காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கலாம்.
டீக்கடைகள்:
டீ கடைகளை என்று வரும் பொழுது நிறைய பேருக்கு நல்ல செய்தி காத்துகொண்டு இருக்கிறது. ஆனா நீங்க டீ கடையில் நின்று டீ குடிக்க முடியாது. பார்சல் வேண்டுமானால் எடுத்துச் செல்லலாம். டீக்கடையில் டீ கடைகளில் பொருத்தவரை இயக்க அனுமதி (பார்சல் மட்டும்) தமிழகம் முழுவதும் காலை 6 மணியிலிருந்து இரவு 7 மணி வரை டீ கடைகள் திறந்திருக்கும்.
டீக்கடைகளில் பச்சி போடுறாங்க, சமோசா போடுறாங்க, பிஸ்கட் ஆகட்டும், முறுக்கு ஆகட்டும் அங்கு நின்றோ, அமர்ந்தோ சாப்பிடக்கூடாது. அங்கு சாப்பிட்டீங்கனா அது விதிமீறலாக கருதப்படும். தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஐந்து முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும். டீ கடைகள் சுத்தமாக இல்லை எனில் மூடப்படும் என்று தமிழக அரசு சொல்லிருக்காங்க.
பெட்ரோல் பங்குகள் இயங்கும் நேரம் அதிகரிப்பு:
சென்னை காவல்துறை எல்லையில் ஒரு தனி நேரம். அது தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் ஒரு தனி நேரம். அதாவது சென்னையில் உள்ள பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ள கூடுதலாக 2 மணி நேரம் காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணி வரை இயங்கலாம். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்படும் என்று தமிழக சொல்லி இருக்கின்றது.
தனியார் நிறுவனங்கள்:
33 சதவிகித ஊழியர்களோடு தமிழகம் முழுவதும் தனியார் நிறுவனங்கள் இயங்கலாம். சென்னை, சென்னையை தவிர மற்ற பகுதி என்று பிரித்துள்ளனர். சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்கள் காலை பத்து முப்பது மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம். தமிழகத்தில் மற்ற பகுதியை பொருத்தவரைக்கும் அரை மணி நேரம் முன்னாடியே திறந்து கொள்ளலாம். ஒரு மணி நேரம் பிறகு மூடலாம். அதாவது காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கலாம். இந்த தளர்வுகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கு பொருந்தாது.