நடித்துக் கொண்டிருக்கும் போதே மண்ணில் சாய்ந்து உயிரிழந்த நடிகரின் உருக்கமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகம் முழுவதும் பரவியுள்ள கொரோனாவால் ஆடிப்பெருக்கு விழா தடை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக ஆடிப்பெருக்கு விழாவின்போது பல கிராமப்புற பகுதிகளில் தெருக்கூத்துகள் நடைபெறும். அந்த வகையில் வேலூரில் உள்ள அணைக்கட்டு என்ற இடத்தில் கமலநாதன் என்பவர் வேடம் போட்டு நடித்து வந்துள்ளார்.
கமலநாதன் சமீபத்தில் நடைபெற்ற கூத்தின் போது நடித்துக் கொண்டிருக்கும் போதே திடீரென மண்ணில் சாய்ந்துள்ளார். பின் அங்கிருந்தவர்கள் அவரை எழுப்ப முயற்சித்தும் போது அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே கீழே விழுந்து இறந்த வீடியோ காட்சியை நடிகர் சங்கம் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. இந்த உருக்கமான காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்று இரவு வேலூர் மாவட்டம் அணைகட்டு தாலுகா மேல் அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த மரியாதைக்குறிய
G கமலநாதன் அவர்கள்
அர்ஜீனன் தபசு தெருகூத்து நாடகத்தில் நடித்துக்
கொண்டிருக்கும் போதே கீழே விழுந்து மாரடைப்பால் அகால மரணமடைந்தார். #RIPKamalanathanG pic.twitter.com/yP808TfTlc— FridayCinema (@FridayCinemaOrg) August 10, 2021