தேனி மாவட்டத்தில் வீடு கட்டுமான பணியில் ஈடுபட்ட பெண் கீழே தவறிவிழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் அல்லிநகரத்தை அடுத்துள்ள வெங்கலாநகரில் பால்ராஜ்(55) மற்றும் அவருடைய மனைவி மல்லிகா(50) வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருமே அப்பகுதியில் கூலித்தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் மல்லிகா நேற்று முன்தினம் துவரங்குளம் பகுதியில் ஒரு வீடு கட்டுமான வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அந்த வீட்டின் முதல் தளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மல்லிகா எதிர்பாராதவிதமாக தவறிக் கீழே விழுந்துள்ளார்.
அந்த விபத்தில் அவரது கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து அங்கு வேலைபார்ப்பவர்கள் உடனடியாக மல்லிகாவை மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் தேனி போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.