காவல் ஆய்வாளர் ஒருவர் பணியில் இருந்த போதே மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பக்கத்தில் உள்ள எழுமலை காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்தவர் தினகரன். இவருக்கு தேனி அருகே உள்ள வெள்ளையம்மாள்புரம் ஆகும். இவர் கடந்த 1996 ஆம் வருடம் காவல் உதவி ஆய்வாளர் பணியில் சேர்ந்து 2010ஆம் வருடம் காவல் ஆய்வாளராக பணி ஓய்வு பெற்று எழுமலை காவல் நிலையத்தில் மதுரை குற்றப்பிரிவு மதுவிலக்கு பிரிவில் பணியாற்றியவர் ஆவார். பின்னர் மீண்டும் எழுமலைக்கு கடந்த 2014ம் வருடம் மாற்றப்பட்டு மூன்று வருடங்களாக காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை அவருக்கு காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று அவருடைய சொந்த ஊரான தேனிக்கு வரத்து சடலம் கொண்டு செல்லப்பட்டு காவல்துறை மரியாதையுடன் இறுதி சடங்கு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.