Categories
தேனி மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட போது… வசமாக சிக்கிய 2 பேர்… கைது செய்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பு…!!

தேனி மாவட்டத்தில் 10 கிலோ மான் இறைச்சியை வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம் கூடலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் காவல்துறையினர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஏகலூத்து சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை போலீசார் அழைத்து விசாரித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கூடலூர் கே.கே காலனியை சேர்ந்த சூரியா, மற்றும் செந்தில்குமார் என்பது தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தபோது அதில் 10 கிலோ மான் இறைச்சி இருந்துள்ளது. மேலும் இருவரை உடனடியாக கைது செய்த போலீசார் கம்பம் மேற்கு வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மானை வேட்டையாடியது யார் என விசாரணை செய்து வருகின்றனர்.

Categories

Tech |