தேனி மாவட்டத்தில் மரத்தில் ஊஞ்சல் கட்டி விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராதவிதமாக கயிறு கழுத்தில் இறுக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள முத்துசங்கிலிபட்டியில் திரவியராஜா என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் திரவியராஜாவின் மூத்த மகன் கவியரசன்(10) கயிற்றால் கட்டப்பட்ட ஊஞ்சலில் விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஊஞ்சலில் கயிறு சிறுவனின் கழுத்தில் சுற்றி கீழே விழுந்துள்ளார்.
இதனையடுத்து அங்கேயே மயக்கமடைந்து விழுந்துள்ளார். இதனைப்பார்த்த திரவியராஜா அதிர்ச்சியடைந்து உடனடியாக சிறுவனை தூக்கிக்கொண்டு தேனி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். ஆனால் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே கவியரசன் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவரது குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர். மேலும் தகவலறிந்து வந்த தேனி க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.