Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போது… தீடிரென தாக்கிய மின்னல்… பரிதாபமாக உயிரிழந்த நபர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்தவர் மீது தீடிரென மின்னல் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்துள்ளது. இந்நிலையில் கமுதி அருகே உள்ள செய்யாமங்கலம் கிராமத்தை சேர்ந்த பழனிவேல்(50) தனது ஆடுகளை வடுகநாதபுரம் வயல் பகுதியில் மேய்த்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக பழனிச்சாமியின் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதனையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து கமுதி தாசில்தார் மாதவன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |