Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

போன் பேசிக்கொண்டிருக்கும்போது… பறித்துக்கொண்டு ஓடிய இளைஞர்… புகார் அளித்த பஞ்சாயத்து பெண் ஊழியர்…!!

நெல்லையில் பஞ்சாயத்து பெண் ஊழியரின் செல்போனை பறித்து கொண்டு தப்பியோடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அடுத்துள்ள தரகன்காட்டில் அழகுராஜா மற்றும் அவருடைய மனைவி பாலசரஸ்வதி வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பாலசரஸ்வதி திசையன்விளை பஞ்சாயத்து ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து நேற்று முன்தினம் செல்வமருதூர் பவுண்ட் தெருவில் வைத்து பாலசரஸ்வதி செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக 2 நபர்கள் சரஸ்வதியின் செல்போனை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி உடனடியாக திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து திசையன்விளை தங்கம் திருமண மண்டபம் தெருவில் வசிக்கும் சண்முக சுந்தரம்(26) இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் சண்முக சுந்தரத்தை உடனடியாக கைது செய்து அவரிடமிருந்த செல்போனையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு நபரும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |