Categories
கிரிக்கெட் விளையாட்டு

“விசில் போடு மச்சி” வீரர்களை உற்சாக மூட்டிய விராட்… அதிர்ந்து போன அரங்கம்…. வைரல் வீடியோ…!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நடந்தது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி ரசிகர்களை நோக்கி விசில் அடிக்குமாறு சைகை காட்டியுள்ள காட்சி இணையத்தில் தற்போது வைரல் ஆகியுள்ளது. இந்திய அணியின் அபார பந்துவீச்சால் 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 63 ரன்கள் 5 விக்கட்டுக்களை இழந்து தவித்து வந்தது.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மைதானத்தில் இருந்த ரசிகர்களை நோக்கி விசிலடித்து வீரர்களுக்கு உற்சாகம் அளிக்குமாறு சைகை காட்டியுள்ளார். அடுத்த நொடி ரசிகர்களின் உற்சாகத்தால் அரங்கம் அதிர்ந்து போயுள்ளது . இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |