இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை 16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கிடையே இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து மற்றும் சில வீரர்களை விடுவித்துள்ளது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான ஐபிஎல் மினி ஏலம் இன்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் 2:30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
# நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனை குஜராத் டைட்டன்ஸ் அணி 2 கோடிக்கு ஏலம் எடுத்தது
# சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹாரி புரூக்கை 13.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
# மயங்க் அகர்வாலை 8.25 கோடிக்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி..
# இந்திய வீரர் அஜிங்கியா ரஹானே 50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
# இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரனை பஞ்சாப் கிங்ஸ் 18.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
#ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் கேமரூன் கிரீனை 17.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை 16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முன்னதாக சுட்டி குழந்தை சாம்கரனை எடுக்க போட்டி போட்ட நிலையில் அவர் கிடைக்காத பட்சத்தில் தற்போது அதே நாட்டைச் சேர்ந்த மற்றொரு நட்சத்திர வீரரை தட்டி தூக்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. பென் ஸ்டோக்ஸை வாங்க லக்னோ, ஆர்சிபி, ராஜஸ்தான், சன்ரைசர்ஸ் அணிகள் போட்டி போட்ட நிலையில் சென்னை அணி அவரை தட்டி தூக்கி உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 20.45 கோடியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரூபாய் 42.25 கோடியும், பஞ்சாப் கிங்ஸ் ரூபாய் 32.2 கோடியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ரூபாய் 23.35 கோடியும், மும்பை இந்தியன்ஸ் ரூ. 20.55 கோடியும், டெல்லி கேப்பிட்டல் ரூபாய் 19.45 கோடியும், குஜராத் டைட்டன்ஸ் ரூபாய் 19.25 கோடியும், ராஜஸ்தான் ராயல்ஸ் ரூபாய் 13.2 கோடியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 8.75 கோடியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7.05 கோடியும் கைவசம் வைத்து வீரர்களை எடுத்து வருகிறது.
இந்த ஏலப் பட்டியலில் மொத்தம் 405 வீரர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது. அதில் 273 பேர் இந்தியர் மற்றும் 132 பேர் வெளிநாட்டு வீரர்கள். இவர்களில் இருந்து அதிகபட்சமாக 30 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 87 பேர் ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
LSG out of the race and Ben Stokes is SOLD to CSK for INR 16.25#TATAIPLAuction | @TataCompanies
— IndianPremierLeague (@IPL) December 23, 2022