நவம்பர் 8 முதல் அமெரிக்கா செல்லும் வெளிநாட்டு பயணிகள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளையும் முழுமையாக பெற்றிருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை நவம்பர் 8-ஆம் தேதி முதல் வெளிநாட்டு பயணிகள் அனைவருக்கும் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் நேற்று வெள்ளை மாளிகை வெளியிட்ட வெளிநாட்டு பயணிகளுக்கான புதிய பயண வழிகாட்டுதலில் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸையும் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அமெரிக்காவுக்கு செல்லும் வெளிநாட்டு பயணிகளும், அமெரிக்க குடிமகன்களும் அமெரிக்கா பயணிப்பதற்கு ஒரு நாள் முன்பு கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அந்நாட்டு அரசு அல்லது சுகாதாரத் துறை வழங்கிய சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இருப்பினும் மாஸ் அணிதல், தொற்று பாதித்தவர்களுக்கு கண்காணிப்பு உள்ளிட்டவை நடைமுறையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் இடம்பெயர்ந்தோர், அமெரிக்கர் அல்லாத குடிமகன்கள் ஆகியோருக்கு நவம்பர் 8-ஆம் தேதி முதல் விமானத்தில் பயணம் செய்வதற்கான தடை முழுமையாக நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.