Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

மோடி வேண்டாம்….! ”புறக்கணித்த அமெரிக்கா” அதிர்ச்சியில் இந்தியா …!!

அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு இந்திய பிரதமர் மோடியை பின்தொடர்வதை செலுத்தியுள்ளது

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்த அமெரிக்க அதிபர். அப்பொழுது வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கான ஒயிட் ஹவுஸ் (@whitehouse)  கணக்கிலிருந்து பிரதமர் மோடி, இந்திய தூதரகம், குடியரசுத் தலைவர் ராம்நாத், அமெரிக்காவிற்கான இந்திய தூதர், பிரதமர் அலுவலகம் என ஆறு ட்விட்டர் கணக்குகளை பின் தொடர ஆரம்பித்தது. ஆனால் இந்த வாரத்தின் தொடக்கத்தில் வெள்ளை மாளிகை அந்த ஆறு லிட்டர் கணக்குகளையும் பின் தொடர்வதை நிறுத்திவிட்டது.

இதுகுறித்து வெள்ளை மாளிகையின் அதிகாரி ஒருவர் “பொதுவாக வெள்ளை மாளிகை ட்விட்டர் கணக்கு அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகளின் கணக்கை மட்டுமே பின்தொடரும். மற்றபடி அமெரிக்க அதிபர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் பொழுது அந்நாட்டின் டுவிட்டர் கணக்குகளை குறிப்பிட்ட காலத்திற்கு பின்தொடரும். அதற்கான காரணம் அந்த நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட பொழுது உள்ள சம்பவங்களை ட்விட் செய்வதற்காக தான்” என கூறியுள்ளார்

இதன் காரணமாகவே இந்திய பிரதமர், இந்திய குடியரசு தலைவர் உள்ளிட்ட 6 ட்விட்டர் கணக்குகளை ஒயிட் ஹவுஸ் டுவிட்டர் கணக்கு பின்தொடர்வதை நிறுத்தியுள்ளது என கூறியுள்ளனர். வெள்ளை மாளிகை மோடியின் ட்விட்டர் கணக்கை பின் தொடர்வதை நிறுத்தியது சமூக வலைதளத்தில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்கையினால் நான் திகைத்துப்போய் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதோடு வெள்ளை மாளிகை ட்விட்டர் பின் தொடர்வதை நிறுத்தியதும் திகைத்து விட்டதாகவும் இதனை வெளியுறவுத் துறை குறித்து வைக்க வேண்டும் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |