Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெளு வெளுன்னு வெளுத்த மழை…!! தூக்கமின்றி தவித்த ஒட்டன்சத்திர மக்கள் …!!

இரவு முழுவதும் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வெள்ள நீர் வீட்டிற்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கடந்த சில நாட்களாகவே வறண்ட சூழல் நிலவி வந்தது. இப்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணிக்கு இடைவிடாமல் 5 மணி நேரம் பெய்த கன மழையினால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. தாழ்வான பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் சாக்கடை நீருடன் மழை நீரும் சேர்ந்து தேங்கி கிடந்தது. இதனால் அப்பகுதியில் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது.

செல்லப்ப கவுண்டன் புதூர் என்னும் பகுதியில் மழைநீர் வீட்டிற்குள் புகுந்ததால், வீட்டில் இருந்த பொருட்கள் தண்ணீரில் மிதந்து வெளியேறின. ஆடு, மாடுகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் நடவு காக வைத்திருந்த 10 லட்சம் மதிப்பிலான சோளம் முற்றிலும் நனைந்து வீணானது. இதனால் அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்தனர். இப்பகுதியில் சாலை விரிவாக்கப் பணி நடந்ததால் தாழ்வான பகுதியாக மாறிவிட்டது.

இதனால் மழைநீர் செல்ல வழியில்லாமல் வீட்டிற்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி விட்டதாக மக்கள் தெரிவித்தனர். இதே போன்ற நிகழ்வு ஏற்கனவே நடந்த போதும் அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் இதே நிலை மீண்டும் நடந்துள்ளது. மேலும் வடகிழக்கு மழை தீவிரம் அடையும் போது பாதிப்பு ஏற்படாமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Categories

Tech |