Categories
உலக செய்திகள்

சுற்றுலா பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய வெள்ளை சிங்கக்குட்டி..!!

தென் ஆப்பிரிக்காவில் வெள்ளைநிற சிங்கக்குட்டி ஒன்று சுற்றுலா பயணிகளை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

காட்டின் ராஜா என்றலைக்கப்படும் சிங்கங்களில் மிகவும் அபூர்வமாக காணப்படுவது வெள்ளைநிறச் சிங்கங்களாகும். இந்நிலையில் வெள்ளை சிங்கக்குட்டி ஒன்று தென் ஆப்பிரிக்காவில் உள்ள குருகர் தேசிய பூங்காவில் படம் பிடிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில்  குருகர் தேசிய பூங்காவில் சில சுற்றுலாப் பயணிகள் விலங்குகளை படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.

Image result for white small  lion images hd

அப்போது வெண்மையும், பழுப்பு நிறமும் கலந்த பெண் சிங்கம் ஒன்று  பழுப்பு நிற குட்டிகளுடன் சென்று கொண்டிருப்பதை கண்டனர். திடிரென்று எதிர்பாராதவிதமாக  அந்த சிங்கத்திற்கு பிறந்த வெள்ளை நிற சிங்கக்குட்டி ஒன்று துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டு வந்து சுற்றுலாப்பயணிகளை வியப்பிற்கு உள்ளாக்கியது. இந்நிலையில் அந்த  வெள்ளை நிற குட்டியைப் பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலாப்  பயணிகள் வருகின்றனர். இந்த குட்டியுடன் சேர்த்து உலகம் முழுவதும் 11 வெள்ளை  நிற சிங்கங்களே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |