Categories
லைப் ஸ்டைல்

“வெள்ளை சர்க்கரைக்கு குட்பாய் சொல்லுங்கள்”…. “வெல்லத்திற்கு வெல்கம் சொல்லுங்கள்”…!!!

வெள்ளை சக்கரை அதிக அளவு நம் உணவில் சேர்த்துக் கொள்வது மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். அதை தெரியாமல் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். வெள்ளை சர்க்கரையை அதிகம் பயன்படுத்தினால் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். உடல் பருமன், சரும நோய், இதய நோய் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் ஏற்படும்.  இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக இனிமேல் வெல்லத்தைப் பயன்படுத்தலாம்.

வெல்லம் தொடர்ந்து சாப்பிடுவது உடலுக்கு மட்டுமின்றி முகத்திற்கும், கூந்தலுக்கும் நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும். பனிக்காலத்தில் ஏற்படும் தொண்டை எரிச்சலைப் போக்குவதற்கு சிறந்த நிவாரணமாக இது உள்ளது. தண்ணீருடன் வெல்லம் கலந்து குடிப்பதால் சளி இருமல் போன்றவை குணமாகும். சாப்பிட்டவுடன் சிறிது வெல்லத்தை வாயில் போட்டு சப்புவது செரிமான பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும். வாயு பிரச்சனை, அசிடிட்டி நீக்குவதற்கும் இந்த வெல்லம் உதவுகிறது

Categories

Tech |